Enable Javscript for better performance
பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் தாமரை குளம் பகுதியைச் சேர்ந்த கந்தன் மனைவி சத்தியா(24). இவர், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இதை அறிந்து 30 வயது மதிக்கதக்க சிவப்பு நிற புடவை அணிந்து பெண் ஒருவர் வந்துள்ளார். மேல்மலையனூரில் சுமங்கலிப் பூஜை நடத்த உள்ளேன் உனது தாலியில் தோஷம் இருப்பதால் தாலி உள்ளிட்ட நகைகளை கழட்டி பூஜை செய்தால் சரியாகிவிட்டும் என்று சத்தியாவிடம் கூறினாராம்.

    இதனை நம்பி சத்தியாவும் தனது தாலி, சங்கிலி, மோதிரம் உள்பட 6 பவுன் தங்க நகை, 50 கிராம் வெள்ளிப் பொருள்களை கழட்டிக் கொடுத்துள்ளார். பின்னர், அந்தப் பெண் கொடுத்து விட்டு சென்ற செல்லிடப்பேசி எண்ணை வேகுநேரமாக தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் சத்தியா புகார் செய்தார்.

    இது குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனியே வீட்டில் இருந்த பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai