Enable Javscript for better performance
வாகன விபத்தில் விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    விக்கிரவாண்டி அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் விசவாயி உயிரிழந்தார்.

     விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.பகண்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராமலிங்கம்(45). விவசாயி. இவர், வெள்ளிக்கிழமை சைக்கிளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து திருக்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, எதிரே வந்த பைக் சைக்கிள் மீது மோதியதில் ராமலிங்கம் படுகாயமைடந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இவரை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

     இது குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai