Enable Javscript for better performance
வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் பறக்கும் படையினரிடம் சிக்கினர்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் பறக்கும் படையினரிடம் சிக்கினர்

    By dn  |   Published on : 15th May 2016 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களைப் பிடித்து பறக்கும் படையினர் போலீஸில் ஒப்படைத்தனர்.

    செஞ்சி தொகுதி பறக்கும் படையினர், அலுவலர் சண்முகம் தலைமையில் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்பாேது, அவலூர்பேட்டை அருகே உள்ள வடுகப்பூண்டி பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரனை(45) பறக்கும் படையினர் பிடித்தனர்.

    அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த, பறக்கும் படையினர் அவரை அவலூர்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர்.

    இதே போல், விழுப்புரம் தொகுதியில் உள்ள கூடுதல் பறக்கும்படையினர், அலுவலர் நிவாஸ் தலைமமையில் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வளவனூர் அங்காளம்மன் கோயில் தெருவில், கும்பலாக திரண்டிருந்த சிலர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்.

    பறக்கும் படையினரைப் பார்த்ததும் அவர்கள், பணத்தை கீழே போட்டுவிட்டு, தப்பியோடி தலைமறைவாகினர். ரூ.26 ஆயிரத்து 250 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இது குறித்து வளவனூர் போலீஸில் புகார் தெரிவித்தனர். இதே போல், 11 தொகுதிகளிலும், வாக்களிக்க பணம் கொடுக்க முயன்றவர்களை பறக்கும் படையினர் பிடித்தனர்.

    வாக்களிக்க பணம் கொடுத்தவர்கள் மீது புகார்:

    விழுப்புரம் பறக்கும் படையினர், அலுவலர் சீனுவாசன் தலைமையில் சனிக்கிழமை காலை பாணாம்பட்டு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது வந்த அதே பகுதியைச் சேர்ந்த, பாமக பிரமுகர் செந்தமிழன் என்பவர், தன்னிடம் அதிமுகவிற்கு வாக்களிக்கச்சொல்லி ரூ.250 பணத்தை வழங்கிய, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் மீது புகார் தெரிவித்தார்.

    அவர் கொடுத்த புகார் கடிதத்தை ஏற்ற பறக்கும் படையினர், வாக்களிக்கச் சொல்லி பணம் வழங்கிய அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சண்முகம், சேட்டு, கல்லபீ உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். இதன் பேரில், சண்முகம் உள்ளிட்ட 4 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai