Enable Javscript for better performance
விஐபி தொகுதிகளில் பணமழை ?- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி விஐபி தொகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் (மே.16) நாளை நடக்கிறது. எப்போதும் இல்லாத வகையில், திமுக, அதிமுக அணிகளுடன், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய அணிகள் களத்தில் இறங்கியுள்ளது.

    இத்தேர்தலில் கூடுதல் அணிகள் களத்தில் இறங்கியுள்ளதால், வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பதில் கடும் நெருக்கடி நிலவுகிறது.

    இதனால், வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள, திராவிட கட்சிகளும், மாற்றத்தை ஏற்படுத்த பாமக, தேமுதிக, பாஜக அணிகளும் தீவிரமாக களத்தில் போராடி வருகிறது.

    இப்போட்டி நிலை, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் மாறிவிடும் சூழல் ஏற்படக் கூடாது என்பதில், உறுதியாக உள்ள அரசியல் கட்சியினர், அதனைத் தடுக்க தீவிரமா போராடி வருகின்றனர். தேர்தல் துறையும், வழக்கத்திற்கு மாறாக கூடுதல் பறக்கும் படையை நியமித்து கண்காணித்துள்ளது.

    ஆனாலும், மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், வாக்குக்கு பணம் விநியோகிக்க முயன்றபோது, கனிசமான தொகையை தேர்தல் துறை கைப்பற்றிள்ளது. இதில், குறிப்பாக, முக்கிய நபர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண மழை பொழிந்துள்ளதாக புகார்கள் குவிந்து வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், தேமுதிக முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், சில அரசியல் கட்சியினரால் பணம் வழங்கப்பட்டுள்ளது.

    அத்தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலு, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையுடன் வந்து, தேர்தல் அலுவரிடம் சனிக்கிழமை புகார் தெரிவித்தார்.

    வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ததை நினைவு கூறிய விஜயகாந்த்தும், தொகுதியில் அதிமுக, திமுக தரப்பில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

    இதே போல், அமைச்சர் மோகன் போட்டியிடும் சங்கராபுரம், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி போட்டியிடும் திருக்கோயிலூர் தொகுதியிலும், அதிமுக முனனாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிடும் விழுப்புரம் தொகுதியிலும் என்று மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை மெய்ப்பிக்கும் வகையில், மாவட்டத்தில் பணம் விநியோகம் செய்ததாக 20 பேர் வரை கைது செய்யப்பட்டும், பறக்கும்படை துரத்தியபோது, சாலையில் வீசிய பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் மாநிலம் முழுவதும் விஐபி தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும், வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் கிடிக்கிப்பிடி கண்காணிப்பையும் மீறி பண மழை பொழிந்துள்ளது, வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai