Enable Javscript for better performance
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3,223 வாக்குச் சாவடிகள் தயார் - Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3,223 வாக்குச் சாவடிகள் தயார்

    By dn  |   Published on : 15th May 2016 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும், திங்கள் கிழமை தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் தயாராகி வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் வரும் மே.16-ஆம் தேதி நடக்க உள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது.

    26 லட்சம் வாக்காளர்கள்:

    இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி, மாவட்டத்தில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 454 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து 21 ஆயிரத்து 9 பெண் வாக்காளர்களும், 323 திருநங்கைகளும் உள்ளிட்ட 26 லட்சத்து, 42 ஆயிரத்து 786 பேர் உள்ளனர்.

    மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அதிக வாக்காளர்கள் கொண்டதாகவும், மயிலம் தொகுதி குறைந்த வாக்காளர்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

    3,223 வாக்குச் சாவடிகள்:

    மாவட்டத்தில் 3,223 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 95 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது. வெப் கேமிரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பணியில் 21 ஆயிரம் பேர்:

    தேர்தல் பணிகளில் 20 ஆயிரத்து 996 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்ளிட்ட 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பாதுகாப்பிற்கு ஆயுதம் ஏந்திய 16 துணை ராணுவக்குழுக்களும், ஊர் காவல் படை உள்ளிட்ட உள்ளூர் போலீஸார் 4,000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    7,704 வாக்குப் பதிவு இயந்திரங்கள்:

    விழுப்புரம் மாவட்டத்தில் அந்தந்த தொகுதிக்குட்பட்ட அலுவலகங்களில், தயார் நிலையில் மொத்தம் 7,704 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளன. அவைகள், ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பணி இடத்திற்கான ஆணை வழங்கப்படும். அவர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற பின், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    மே.16-ல் தேர்தல்:

    இதனையடுத்து, தேர்தல் நாளான திங்கள் கிழமை காலை 6 மணிக்கு, கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும்.

    இதன் பின்னர் சீலிடப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தயாராகும். காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    வாக்குப் பதிவு நிறைவடைந்த உடன், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன், உரிய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai