Enable Javscript for better performance
வாக்காளர்களுக்கு குமரகுரு எம்எல்ஏ நன்றி- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர்களுக்கு குமரகுரு எம்எல்ஏ நன்றி

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 21st May 2016 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா.குமரகுரு எம்எல்ஏ, திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேலை விட கூடுதலாக 4,164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, தொடர்ந்து 3ஆவது முறையாக தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். தொகுதிக்குள்பட்ட திருநாவலூர், பரிக்கல், பெரியப்பட்டு, கருவேப்பிலைப்பாளையம், மடப்பட்டு, வண்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கட்சியினருடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

     நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலர்கள் திருநாவலூர் ஏ.ஆர்.செண்பகவேல், உளுந்தூர்பேட்டை ஜி.மணிராஜ், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய முன்னாள் செயலர் ஏகாம்பரம், மாவட்ட துணைச் செயலர் எம்.பரமாத்மா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai