சுடச்சுட

  

  மதுபாட்டில்கள் கலால் துறையிடம் ஒப்படைப்பு

  By விழுப்புரம்,  |   Published on : 17th November 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 556 மதுபாட்டில்கள் கலால் துறையில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
   ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விழுப்புரம் ரயில் நிலையத்தில், மதுக் கடத்தலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
   அதன்படி, காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான, உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் ரயில் நிலையம், ரயில் பெட்டிகளில் மேற்கொண்ட சோதனையில் கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 556 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்களை விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டக் கலால் அலுவலர் அலுவலகத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai