Enable Javscript for better performance
இன்று கடையடைப்புப் போராட்டம் இல்லை: த.வெள்ளையன் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இன்று கடையடைப்புப் போராட்டம் இல்லை: த.வெள்ளையன் அறிவிப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 28th November 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவித்திருந்த கடையடைப்புப் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
     விழுப்புரம், பாகர்ஷா வீதி வணிகர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில், ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது, சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஏழை, எளிய மக்களின் கையில் இருக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
     மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவித்திருந்த கடையடைப்புப் போராட்டத்தைப் பல்வேறு காரணங்களால் தள்ளி வைத்துள்ளோம். அதே நேரத்தில், திங்கள்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் பங்கேற்பர்.
     அந்நிய வர்த்தகத்தைக் கண்டித்து, தமிழகத்தின் முக்கிய கடை வீதிகளில் வருகிற டிச. 15 முதல் ஜன. 1ஆம் தேதி வரை கறுப்புக் கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பைத் தெரிவிப்போம். பின்னர், அங்கு ஜன. 1 முதல் 14ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதேசிப் பொருள்களை மக்கள் வாங்க வலியுறுத்தி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்றார்.
     முன்னதாக, விழாவில் சங்கத் தலைவர் கே.நடராஜன் தலைமை வகிக்க, செயலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். பொருளர் இஸ்மாயில் வரவேற்றார்.
     கௌரவத் தலைவர்கள் முருகன், ஜகிராபாய், துணைச் செயலர்கள் நௌஷத், ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai