Enable Javscript for better performance
உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல்- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் ஞானானந்த நிகேதன் அறக்கட்டளை சார்பில் உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     முன்னதாக, ஸத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் அம்பிகை உடனுறை சிவபெருமான், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் திருவுருவச் சிலைகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
     இதனைத் தொடர்ந்து கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிவபஞ்சாயதன பூஜைகள் நடைபெற்றன.
     அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுவாமி நித்யானந்தகிரி, சுவாமிகள் ஸமானந்தா, சதாசிவகிரி, பிரபவானந்தா, ஆத்மதத்வானந்தா, அம்ருதேஸ்வரானந்தா ஆகியோர் தலைமை வகித்தனர்.
     திருச்சி சேக்கிழார் மன்றம், திருச்சி திருவாதவூரார் முற்றோதல் குழு, உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் வார வழிபாட்டு மன்றம், மணப்பாறை திருவாசகம் அன்பர் குழு, கிழக்குத் தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், கீழ்விஷாரம் அப்பர் சுவாமிகள் மட தேவார பயிற்சி மைய மாணவர்கள், கண்டாச்சிபுரம் தமிழ் வேத வார வழிபாட்டு சபை, திருக்கோவிலூர் சைவ சிந்தாந்த மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார ஆன்மிக அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலர் பரமேஸ்வரன், அறங்காவலர்கள் பி.என்.தேவராஜன், ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சுவாமிநாதன், வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai