Enable Javscript for better performance
எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இலக்கியப் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இலக்கியப் பயிலரங்கம்

    By திருக்கோவிலூர்,  |   Published on : 28th November 2016 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இலக்கியப் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பாரதிசுகுமாரன் தலைமை வகித்தார். அரகண்டநல்லூர் தமிழ்ச் சங்கத் தலைவர் தேவ.சுந்தரவடிவேல், அரசு ஊழியர் சங்கச் செயலர் அன்புநிலவன், ஓய்வுபெற்ற ஆசிரியர் விளந்தை அ.சண்முகம், சங்கத் துணைச் செயலர் கோட்டமருதூர் எம்.ஆர்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் தே.முருகன் வரவேற்றார்.
     கவிஞர்கள் பெண்ணைவளவன், சீ.விக்கிரமன், ஸ்ரீமுஷ்ணம் சத்யன், லியோகிளமண்ட், எழுத்தாளர் கு.கார்க்கி, வே.ஜெயக்குமார் ஆகியோர் இக்கால படைப்பிலக்கியம் குறித்துப் பேசினர்.மாற்றுவோம் முன்னேற்றுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில், ஆலம்பாடி மா.பாலமுருகன், இரா.சுதாகரன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். மக்கள் இசைப் பாடகர்கள் வேட்டவலம் டேவிட், ஆர்.ராதாகிருஷ்ணன், தேசப்பிரியன், தனுசு ஆகியோர் சமுதாய மாற்றத்துக்கான பாடல்கள் பாடினர். மாணவர் சதீஷ் திருக்குறள் ஒப்பித்தார்.
     விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளாகத் தமிழ்ப் பணியாற்றி, படைப்பிலக்கியத்தில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு, அடுத்த மாத நடைபெற உள்ள விழாவில், இலக்கிய இமயம் என்ற விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
     கூட்டுறவு வங்கிச் செயலர் என்.எஸ்.மணியன், கவிஞர் ஜெனா, சித்த வைத்தியர் உ.பீட்டர், பள்ளி ஊழியர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். புகைப்படக் கலைஞர் கண்டாச்சிபுரம் முருகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai