Enable Javscript for better performance
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 28th November 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் எலவனாசூர்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மாநிலத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொருளர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். மாநில மகளிரணிச் செயலர் அபிதா நசிரின் வரவேற்றார்.
     மாநிலப் பொதுச் செயலர் இரா.தாஸ் பேருரையாற்றினார். மாவட்டத் தலைவர் அறிவழகன், செயலர் சு.ரமேஷ், கட்டடச் செயலர் பி.இளஞ்செழியன், பொருளர் ஆர்.வெங்கடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில், ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைதல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், 7 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அறிவித்தல், ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1:30 என்பதை மாற்றி, 1:20 ஆக குறைத்தல், ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai