Enable Javscript for better performance
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தொடர் முழக்கப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தொடர் முழக்கப் போராட்டம்

    By விழுப்புரம்,  |   Published on : 28th November 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் க.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சின்னசாமி வரவேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச் செயலர் சண்முகம், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
     மாநிலத் தலைவர் தியோடர் ராபின்சன், கல்வி உரிமைப் பாதுகாப்புப் கூட்டமைப்புத் தலைவர் நா.மணி, ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் தியாகராசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாசு, ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் செல்வராசு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கப் பொதுச் செயலர் சத்தியமூர்த்தி, தமைமை ஆசிரியர் கழகச் சிறப்புத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
     குலக் கல்வித் திட்டத்தின் மாற்று வடிவமாகக் கொண்டு வரப்படவுள்ள தேசிய புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுப்படி ஊதியமும், அகவிலைப்படி உயர்வும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai