Enable Javscript for better performance
பிரபாகரன் பிறந்த நாள் சுவரொட்டி ஒட்டியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பிரபாகரன் பிறந்த நாள் சுவரொட்டி ஒட்டியவர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 28th November 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் சுவரொட்டி ஒட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
     விழுப்புரம் தாலுகா உதவிக் காவல் ஆய்வாளர் சிவக்குமார் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றார்.
     அப்போது, பெருந்திட்ட வளாகச் சுவரில் அனுதியின்றி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தார். விசாரணையில், விழுப்புரம் வி.மருதூரைச் சேர்ந்த படையப்பா (50) என்பது தெரிய வந்தது. அவர் மீது தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த செல்வபெருமாள், சைலேந்தர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai