Enable Javscript for better performance
மாவட்ட வேளாண் பணிகள்: அரசு முதன்மைச் செயலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட வேளாண் பணிகள்: அரசு முதன்மைச் செயலர் ஆய்வு

    By விழுப்புரம்,  |   Published on : 28th November 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பணிகள், நீர் நிலைகளின் தன்மைகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பாளரும் அரசு முதன்மைச் செயலருமான, அதுல்ய மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
     இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகுத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.நரேந்திரன் நாயர், வருவாய் அலுவலர் ராஜசேகரன், சார் ஆட்சியர் ஸ்ரீதர், வன அலுவலர் ஆனந்த், மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் சேவாசிங், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் மணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அனுசுயா தேவி, செயற்பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     இதில், மாவட்ட வேளாண் துறை மூலம் நடைபெற்று வரும் விவசாயப் பணிகள், நீர் நிலைகளின் தன்மை, உரங்கள் இருப்பு விவரங்கள், விவசாயக் கடன் வழங்குதல், விவசாயக் காப்புறுதித் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் ஆகியவை குறித்து அரசு முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா ஆய்வு செய்தார்.
     அப்போது பேசிய அவர், வேளாண் பணிகளை விரைந்து முடிக்கவும், விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதைகள், இடுபொருள்கள் விரைந்து கிடைக்கவும், விவசாயக் கடன்கள் வழங்கவும் அறிவுறுத்தினார். மேலும், நீர் நிலைகளை முறையாகப் பராமரிக்கவும், ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
     முன்னதாக அவர், பிடாகத்தில் உள்ள தேசிய தோட்டக்கலை, பொதுப்பணித் துறையின் மூலம் பராமரிக்கப்படும் நீர் நிலைகள், திருநாவலூர் ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள், உளுந்தூர்பேட்டை வட்டம், ஓலையூர் பகுதி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியங்களில் வேளாண் துறை மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி உளுந்துப் பயிர்கள், காப்பிட்டுத் திட்டங்கள், விக்கிரவாண்டி ஒன்றியங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், வீடுர் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai