Enable Javscript for better performance
வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     சாலமேடு சின்னப்பா நகரைச் சேர்ந்தவர் அழகுராஜா (38). இவர், தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வீட்டின் பின்பகுதியில் இருந்து சப்தம் வந்ததால், எழுந்து சென்று பார்த்துள்ளார். அப்போது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்ததுடன், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
     இது குறித்து சந்திரசேகரன் விழுப்புரம் தாலுகா போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai