Enable Javscript for better performance
அரசுக் கல்லூரியில் ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவெண்ணெய்நல்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விழுப்புரம் அரிமா சங்கம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். வட்டார சுகாதார நிலைய மருத்துவர் சுகந்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இந்திரா வரவேற்றார்.
    அரசூர் வி.ஆர்.எஸ் பொறியியல் கல்லூரி முதன்மைச் செயலாக்க அலுவலரும், விழுப்புரம் மாவட்ட அரிமா சங்கத் துணை ஆளுநருமான மு.சரவணன், ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் மருத்துவ அலுவலர் வசுமதி, செவிலியர்கள் நர்மதா, கலா, ஹெலன்மார்க்ரெட் ஆகியோர் 76 மாணவர்களிடமிருந்து ரத்தம் பெற்று, மருத்துவமனையில் வழங்கினர்.
    வேலைவாய்ப்பு முகாம்: இந்தக் கல்லூரியில் கிராமப் புனரமைப்பு இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
    வணிகவியல் துறை தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான இந்திரா தலைமை வகித்தார். மேலாளர்கள் தனபால், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்முக தேர்வை செயலர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் நடத்தினர். கல்லூரி முதல்வர் முகாமை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
    தொடர்ந்து, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்து வேலையில்லாத பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பைப் பெற்றனர். கணிதத்துறைத் தலைவர் பாலகுமார், இயற்பியல் துறைத் தலைவர் சண்முகசுந்தரம், கணினி அறிவியல்துறைத் தலைவர் புவனேஸ்வரி, ஆங்கிலத்துறைத் தலைவர் நாகலட்சுமி, தமிழ்த்துறைத் தலைவர் முப்பாலிகை, உதவிப் பேராசிரியர்கள் அருண், தயாளமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai