Enable Javscript for better performance
ஆயுதபூஜை பொருள்கள் விற்பனை மும்முரம்- Dinamani

சுடச்சுட

    

    ஆயுதபூஜையை முன்னிட்டு பூ, பழம், பொரிகடலை உள்ளிட்ட பூஜை பொருள்களின் விற்பனை வெள்ளிக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
    நவராத்திரி விழாவைத் தொடர்ந்து, ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
    நவராத்திரி நிறைவு நாளான திங்கள்கிழமை (அக்.10) ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.
    பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சனி, ஞாயிறு, மற்றும் திங்கள்கிழமை என தொடர்ந்து விடுமுறை என்பதால், அங்கு ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    ஆயுதபூஜையையொட்டி விழுப்புரம் திரு.வி.க. வீதி, பாகர்ஷா வீதி உள்ளிட்ட பகுதிகளில் பூ, பழங்கள், பொரிகடலை விற்பனை வெள்ளிக்கிழமை காலை முதல் மும்முரமாக நடைபெற்றது.
    பொரி ஒரு கிலோ ரூ. 70-க்கும், வாழைப்பழம் டஜன் ரூ. 40-க்கும் ஆப்பிள் பழம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 120 வரையும், சாத்துக்குடி கிலோ ரூ. 60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    பூக்களின் விலை உயர்வு: பண்டிகை தினம் என்பதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் வெள்ளிக்கிழமை ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ரூ. 150-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ரூ. 160-லிருந்து ரூ. 200-க்கு விற்பனையானது. சாமந்தி ரூ. 80-லிருந்து ரூ. 120-க்கு விற்கப்பட்டது. அடுத்த இரண்டு நாள்களுக்கு பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
    பூசணிக்காய் சிறியது ரூ. 40-க்கும், பெரியது ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai