Enable Javscript for better performance
கல்லூரியில் திறனூக்கப் பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    மயிலம் பொறியியல் கல்லூரியில் அனைத்துத் துறைகளைச் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திறனூக்கப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ம.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வே.சுகுமாறன், செயலர் நாராயணசாமிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார். டீன் ராஜப்பன் பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜெகன், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளை அளித்தார்.
    அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai