Enable Javscript for better performance
பத்தே நாளில் பழுதடைந்த தார் சாலை- Dinamani

சுடச்சுட

    

    சங்கராபுரம் அருகே அமைக்கப்பட்ட பத்து நாள்களிலேயே தார்சாலை பழுதடைந்துள்ளது.
    சங்கராபுரம்-திருக்கோவிலூர் பிரதான சாலையில் அமைந்துள்ள தேவபாண்டலத்தில் இருந்து பிரிந்து சௌந்தரவல்லிப்பாளையம், பாவளம், மல்லாபுரம் வழியாக ரங்கப்பனூர் செல்லும் சாலை உள்ளது.

    தேவபாண்டலம் ஏரிப் பகுதியில் இருந்து சௌந்தரவல்லிப்பாளையம் கிராமம் வரை சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு, கடந்த 5 ஆண்டுகளாக இச்சாலை மிகவும் பழுதடைந்து, போக்குவரத்துக்குத் தகுதியற்றநிலையில் இருந்தது.
    இதனால் இவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், கடந்த 8 மாதத்துக்கு முன் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆமை வேகத்தில் நடைபெற்ற இப்பணி, கடந்த சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.
    இந்நிலையில், சாலை அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே இச்சாலை மீண்டும் பழுதடைந்துள்ளது. தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதே இதற்குக் காரணம்.
    எனவே, தரமற்ற முறையில் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், சாலையைத் தரமான முறையில் மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று என்று இப்பகுதி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai