Enable Javscript for better performance
மகாலட்சுமி அலங்காரத்தில் சிவானந்தவல்லி அம்பிகை- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர்-கீழையூர் விரட்டானேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அலங்காரத்தில் சிவானந்தவல்லி அம்பிகை காட்சியளித்தார்.
    முன்னதாக, காலை 6 மணியளவில் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாலை சிவானந்தவல்லி அம்பிகைக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவர்ண பூஜை, மகா அபிஷேகம் நடைபெற்றது.
    இதனைத் தொடர்ந்து, அலங்கார கொலு மண்டபத்தி ல் சிவானந்தவல்லி அம்பிகைக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனையுடன் சோடசோபஸார தீபாராதனை நடைபெற்றது.
    மேலும், சதூர்வேத உபசாரம், மந்திர புஷ்பம், ராக உபசாரம் மற்றும் அம்பிகை பாடல்களுடன் பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai