Enable Javscript for better performance
ரேஷன் விநியோகத்தில் குளறுபடி: எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் விநியோகத்தில் குளறுபடி: எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்களைச் சரிவர வழங்காததைக் கண்டித்து செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் செஞ்சி கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    செஞ்சி தொகுதியில் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன.
    இந்நிலையில் இங்குள்ள நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு 200 கிராம், உளுத்தம் பருப்பு 300 கிராம், பாமாயில் அரை லிட்டர், மண்ணெண்ணெய் ஒன்றரை லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறதாம். இந்தப் பொருள்களும் மாதாமாதம் வழங்கப்படாமல், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வழங்கப்படுகிறதாம். மேலும், தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
    எனவே, இதனைக் கண்டித்து செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திமுக ஒன்றியச் செயலர்கள் செஞ்சி கிழக்கு விஜயகுமார், மேற்கு விஜயராகவன், மேல்மலையனூர் கிழக்கு நெடுஞ்செழியன், மேற்கு சுப்பிரமணி, செஞ்சி நகரச் செயலர் காஜா நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அரங்க ஏழுமலை, வழக்குரைஞரணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்டப் பொறியாளர் கே.எஸ். மொக்தியார் அலி, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சக்திபிரியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai