Enable Javscript for better performance
ரௌடி கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் 6 பேர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    ரௌடி கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

    By DIN  |   Published on : 08th October 2016 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி ரௌடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.
    விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி ஜனா (எ) ஜனார்த்தனன் (32). இவர், கடந்த 4ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு, பைக்கில் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்மக் கும்பல் ஜனார்த்தனன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதுடன், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    எஸ்.பி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் வெள்ளைச்சாமி, ஞானவேல் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படையினர், குற்றவாளிகளை தேடி வந்தனர். வியாழக்கிழமை புதுச்சேரியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
    மேலும், புழல் சிறையில் உள்ள ரௌடி ராஜ்குமாரின் கூட்டாளியான குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த டான் (எ) திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலரையும் தேடி வந்தனர்.
    இந்த நிலையில், ஜனார்த்தனன் கொலை தொடர்பாக, வெள்ளிக்கிழமை காலை விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டான் (எ) திருநாவுக்கரசு (24), குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த மூவர், பொம்மையார்பாளையம் மற்றும் புதுச்சேரி சேதுராப்பட்டைச் சேர்ந்த இருவர் என 6 பேர் நீதிபதி விக்னேஷ் பிரபு முன் சரணடைந்தனர்.
    இதையடுத்து, திருநாவுக்கரசு கடலூர் மத்திய சிறையிலும், மற்ற 5 பேர் செஞ்சி சீர்திருத்தப்பள்ளியிலும் வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai