Enable Javscript for better performance
வாகனம் மோதி: பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி மல்லிகா (28). இவர், கூலி வேலைக்குச் செல்வதற்காக தியாகதுருகம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் காயமடைந்தார். அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    அங்கு அவர் இறந்தார். இது குறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai