Enable Javscript for better performance
வாய்க்கால் இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வாய்க்கால் இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி நகரில் சில பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே, அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நகராட்சிக்குள்பட்ட சில வார்டுகளில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாமலும் சாலை சரியில்லாமலும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, துருகம் சாலை, திருவரங்கம் நகர் சாலை உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மழைக் காலத்தில் அந்த இடமே குட்டை போல ஆகிவிடுகிறது.
    இதனால் கொசு உற்பத்தி பெருகி, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    எனவே, நகராட்சி நிர்வாகம் மழைக்காலம் தொடங்குவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai