Enable Javscript for better performance
விடுதிக் காப்பாளர் மீது நடவடிக்கை கோரி தேமுதிக மனு- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களைத் துன்புறுத்தும் அரசு விடுதிக் காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக வலியுறுத்தி உள்ளது.
    இது குறித்து தேமுதிக ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன், மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட அரியலூரில் அரசினர் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி உள்ளது.
    இங்கு மாணவர்களை காப்பாளர் அடித்துத் துன்புறுத்துவது, சமையல் செய்ய வைப்பது, முறையாக உணவு வழங்காதது மற்றும் மாணவர்களைக் கொத்தடிமைகள் போல் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
    இவ்வாறு மாணவர்களைத் துன்புறுத்தும் விடுதிக் காப்பாளர் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தவறும்பட்சத்தில் வருகிற 20-ஆம் தேதி பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai