Enable Javscript for better performance
ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் 7-ஆம் நாள் நவராத்திரி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் நவராத்திரி 7-ஆம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
    விழாவுக்கு, ஆஸ்ரம தலைமை மாதாஜி யதீஸ்வரி இராமகிருஷணப்ரியா அம்பா தலைமை வகித்து, ஆசியுரை வழங்கினார். ஆசியுரையில் அவர் கூறியதாவது: உயர்ந்த குணங்களை உருவாக்குவதுதான் உண்மையான கல்வி. அறிவில் சிறந்து விளங்கிய பல மகான்கள் இந்த பாரத பூமியில் பிறந்து, மக்களை நல்வழிப்படுத்தியுள்ளனர் என்றார்.
    ஸ்ரீசாரதா மகளிர் கல்வியியல் கல்லூரிச் செயலர் யதீஸ்வரி நித்யவிவேகப்ரியா அம்பா வரவேற்புரையாற்றினார்.
    விழாவில் சென்னை நெல்லை செட்டி ட்ரஸ்ட் அறங்காவலர் வி.பத்ரிநாராயணா கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார். அவரது துணைவியார் அருணா பத்ரிநாராயணா திருவிளக்கேற்றி வைத்து, விழாவைத் தொடங்கி வைத்தார்.
    நவராத்திரி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராஜமாதங்கி மீனாட்சி, ஊஞ்சலில் காட்சியளித்தார்.
    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பழனி முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து முருகû வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai