Enable Javscript for better performance
3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 3,500 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய உதவிக் காவல் ஆய்வாளர் கலியமூர்த்தி தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை இரவு, கொடியம் கூட்டுச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, சாலையோரம் லாரி ஒன்று நின்றிருந்தது. அங்கு சென்ற போலீஸார், லாரியில் இருந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீஸார், லாரியை சோதனையிட்டனர். அதில் 100 கேன்களில் 3,500 லிட்டர் எரிசாராயம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
    இதனையடுத்து, லாரி ஓட்டுநரான சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த மனோகர் (61), அவருடன் வந்த திண்டிவனத்தை அடுத்த ஒரத்தி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ. 3.50 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai