Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மரக்காணம் அருகே அரசுப் பள்ளியின் ஜன்னல் கம்பியை உடைத்து மின் விசிறிகள், டிவிடி பிளேயர் உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     கந்தாடு கிராமத்தில் ஊராட்சித் தொடக்கப் பள்ளி உள்ளது. ஆயுதபூஜையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வியாழக்கிழமை பள்ளியைத் திறந்தபோது, வகுப்பறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தன.
     உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 மின் விசிறிகள், டிவிடி பிளேயர் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.
     இது குறித்து தலைமை ஆசிரியர் (பொ) விக்டர் மரக்காணம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai