Enable Javscript for better performance
ஆசிய பீச் கபடிப் போட்டியில் பதக்கம் வென்றவருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய பீச் கபடிப் போட்டியில் பதக்கம் வென்றவருக்குப் பாராட்டு

    By திருக்கோவிலூர்  |   Published on : 15th October 2016 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிய பீச் கபடிப் போட்டியில் பதக்கம் வென்றவருக்கு, திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகள் அந்தோணியம்மாள் (23). இவர், கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் 27 வரை வியத்நாம் நாட்டில் நடைபெற்ற ஆசிய பீச் கபடிப் போட்டியில் இந்திய பெண்கள் அணியில் பங்கேற்று விளையாடி தங்கப் பதக்கம் வென்றார்.
     அவரின் சாதனையைப் பாராட்டும் வகையில், ஜி.அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பாராட்டு விழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சி.குருராஜன் வரவேற்றார். ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஏ.பி.பழனி, வழக்குரைஞர் கே.உமாசங்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டிப் பேசினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai