Enable Javscript for better performance
இருவேல்பட்டு வேளாண் விதைப் பண்ணையில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    இருவேல்பட்டு வேளாண் விதைப் பண்ணையில் ஆட்சியர் ஆய்வு

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 15th October 2016 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், இருவேல்பட்டு வேளாண் விதைப் பண்ணை வயலில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     அங்கு, இயந்திர நெல் நடவு நாற்றாங்கால், தென்னை நாற்றாங்கால், புதிய போர்வெல் பணிகள், தானியங்கி வானிலை மையம், சுற்றுவெளி மேம்பாட்டு பணிகள், விதை சுத்திகரிப்பு மையத்தில் நடைபெறும் பணிகள், விதை உற்பத்தி முறைகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியர் அலுவலர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
     பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, உயர் ரக உரங்கள், தெளிப்பான்கள் மற்றும் உழவு இயந்திரங்களை வழங்கினார். தொடர்ந்து, திருநாவலூர் ஒன்றிய வேளாண் வயல்வெளி பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     உதவி ஆட்சியர் (ப) சரயு, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (விவசாயம்) செல்வசேகர், சுரேஷ், விதைச்சான்று உதவி இயக்குநர் ராமசாமி, வேளாண் அலுவலர் கனகராஜ், பண்ணை மேலாளர் கருப்பையா, விதைச்சான்று அலுவலர் சந்தோஷ்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் விநாயகம், சீனுவாசன், ரிச்சர்டு, பாக்கியராஜ், ஆனந்தபத்நாபன், விதை உதவி அலுவலர் அந்தோணிசாமி, சௌந்தர்யமேரி உள்பட பலர் உடனிருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai