Enable Javscript for better performance
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் திருட்டு

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 15th October 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
     களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்வர் பாஷா. இவரது மனைவி பவ்ஷியா (28). இவர், தனது மூன்று குழந்தைகளுடன் விடுமுறைக்காக திருவண்ணாமலை பகுதியில் உள்ள தனது தந்தை முகமது அனிபா வீட்டுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து புதன்கிழமை மாலை பேருந்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
     அப்போது, பையில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ஏடிஎம் கார்டு காணாமல் போயுள்ளது.
     இது குறித்து பவ்ஷியா திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai