Enable Javscript for better performance
கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    விளக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் மு.பொன்னுசாமி தலைமை வகித்தார். ஆசிரியைகள் மா.மீனாட்சி சுந்தரி, கோ.அருள்மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சி.சரவணன் வரவேற்றார். புக்குளம் பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.நாகராஜன், மாணவர்களின் கல்வி நிலை மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
     சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.ராசேந்திரன், காலாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். பள்ளி ஆசிரியர்கள் சு.சுதா, சி.மரியபிரபா, இ.மணிராஜ், அல்மாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai