Enable Javscript for better performance
சிமென்ட் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.70 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சிமென்ட் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.70 லட்சம் திருட்டு

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வளவனூர் அருகே சிமென்ட் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.70 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
     மோட்சகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (55). இவர், அதே ஊரில் சிமென்ட் கடை வைத்துள்ளார். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சென்றார். மறுநாள் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 1.70 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
     இது குறித்து வளவனூர் போலீஸில் துரை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai