Enable Javscript for better performance
திருட்டு வழக்கில் இளைஞருக்கு 8 மாதங்கள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் இளைஞருக்கு 8 மாதங்கள் சிறை

    By விழுப்புரம்  |   Published on : 15th October 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மடிகணினி திருடிய வழக்கில் இளைஞருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
     விழுப்புரம் அருகேயுள்ள விராட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் அன்பு (25). கடந்த 14.2.2016 அன்று இவர், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த மடிகணினியைத் திருடிச் சென்றார்.
     இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாலுகா போலீஸார், திண்டிவனம் அருகே ஒலக்கூரை அடுத்த ஆச்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐயனாரை (28) கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.மும்தாஜ், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐயனாருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai