Enable Javscript for better performance
பாம்பு கடித்து விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே பாம்பு கடித்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     எ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(55). விவசாயியான இவர், வியாழக்கிழமை தனது வயலில் ஏர் உழுது கொண்டிருந்தார். அப்போது, அவரை விஷப்பாம்பு கடித்துவிட்டதாம்.
     இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கந்தனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
     இது குறித்து அவரது மனைவி அம்மாசி திருநாவலூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai