Enable Javscript for better performance
பெருந்திட்ட வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பெருந்திட்ட வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆக்கிரமித்திருந்த தாற்காலிக கடைகளை போலீஸார் அகற்றினர்.
     ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாக வாயில் பகுதி தொடங்கி, மாவட்டக் காவல் துறை அலுவலகம் வரை சாலையோரங்களில் தாற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.
     கரும்புச்சாறு கடை, இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை, இளநீர் விற்பனை, தானியங்கள் விற்பனை, கூழ் விற்பனை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு சாலையோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்ததால், அவற்றை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். இதன்படி, விழுப்புரம் தாலுகா போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு ஆக்கிரமித்திருந்த கடைகளை அப்புறப்படுத்தினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai