Enable Javscript for better performance
பேரிடர் குறைப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பேரிடர் குறைப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 15th October 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
     பேரணியை கோட்டாட்சியர் கு.சண்முகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் நா.ராஜமாணிக்கம் வரவேற்றார்.
     பருவமழை, நிலநடுக்கம், புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தற்காப்பு வழிமுறைகள் குறித்து நடைபெற்ற இந்தப் பேரணியில் அது குறித்து வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
     பேரணியில் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அரிமா, ரோட்டரி சங்கத்தினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
     சின்னசேலத்தில் நடைபெற்ற பேரணியை வட்டாட்சியர் வ.கமலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், தீயணைப்புத் துறையினர் பேரிடர் கால மீட்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
     திருக்கோவிலூரில்...
     இதேபோல் கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள் பேரிடர் கால மீட்பு செயல் விளக்கம் அளித்தனர்.
     தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் சு.செந்தாமரை தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
     வருவாய் வட்டாட்சியர் மு.பழனி, துணை வட்டாட்சியர் ஜி.கற்பகம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai