Enable Javscript for better performance
பைக் திருட்டு: 2 பேர் போலீஸில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒலக்கூர் பகுதியில் பைக் திருடியதாக 2 பேரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
     ஒலக்கூரை அடுத்த பாரிதி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் அன்னக்கிளி (43). இவர் தனது நண்பர்கள் குமார், மோகன்தாஸ் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை பாதிரி பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அப்போது, பைக்குடன் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை அன்னக்கிளி விசாரித்துள்ளார்.
     அப்போது, அந்த இருவரும் பைக்கை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் இருவரையும் அன்னக்கிளி மற்றும் அவரது நண்பர்கள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், அங்கு பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் ஒலக்கூர் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai