Enable Javscript for better performance
பொதுவழி ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    பொதுவழி ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியரிடம் மனு

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 15th October 2016 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுவழியை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தியாகதுருகம் பொதுமக்கள், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
     தியாகதுருகம் ஒளவையார் சாலை வழியாக செல்வநகர் மற்றும் பேட்டைத் தெருவுக்குச் செல்லும் பொதுவழி உள்ளது. இந்தப் பொதுவழியை, செல்வநகரில் வசிக்கும் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளாராம்.
     ஒளவையார் சாலைப் பகுதியில் வசிக்கும் மக்கள், பல ஆண்டு காலமாக அந்தப் பொதுவழியைப் பயன்படுத்தி வந்த நிலையில், தனியார் ஒருவர் தன் சொந்த இடம் எனக் கூறி, வழியை அடைத்துள்ளதால் பொதுமக்களும், அரசு மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளும் நீண்ட தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.
     எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒளவையார் சாலை பொதுமக்கள், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
     மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், தலைமை நில அளவையரிடம் இது குறித்து கேட்டறிந்து, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai