Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெற உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தேர்வு நடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆண், பெண் தேர்வர்களைப் பரிசோதிக்க தக்க ஏற்பாடு செய்தல், தேர்வு நாளன்று தேர்வு மையத்துக்கு வருவோருக்கு உரிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்தல், மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்தல் குறித்து உரிய துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
     மேலும், தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, உரிய முன்னேற்பாடுகளைச் செய்யவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
     மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், பயிற்சி ஆட்சியர் சரயு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுசுயாதேவி, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுசுயாடெய்சிஎர்னஸ்ட் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai