Enable Javscript for better performance
மின்வேலி அமைத்த விவசாயி கைது- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி அருகே நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்த விவசாயியை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
     வீரபயங்கரம் கிராமம், வடக்குகாட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஹரீஷ் (10). இவர், தனது தாயுடன் புதன்கிழமை கந்தசாமி நிலத்தின் வழியாக வீட்டுக்குச் சென்றார். அப்போது நிலத்தின் வரப்பு ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் கால்பட்டு, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
     இது குறித்து கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிலத்தின் உரிமையாளர் வேப்பநத்தம், காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கந்தசாமியை (59) வெள்ளிக்கிழமை கைது செய்து, சங்கராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
     நீதிபதி கே.சண்முகம் அவரை 15 நாள்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai