Enable Javscript for better performance
மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் நகைப் பறிப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலம் அருகே பெண்ணின் மீது மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
     கோரக்கேணி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் திருமலைநாயகன். இவரது மனைவி ஜெயந்தி (21). இவர், வியாழக்கிழமை வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்துக்குச் சென்றார்.
     அப்போது மர்ம நபர் ஒருவர், ஜெயந்தியின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு, 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai