Enable Javscript for better performance
முறைகேடாக நிலம் விற்பனை: சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    முறைகேடாக நிலம் விற்பனை: சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வானூர் அருகே உரிமையாளருக்குத் தெரியாமல் முறைகேடாக நிலத்தை விற்பனை செய்ததாக சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     புதுச்சேரி மாநிலம், உழவர்கரை பகுதியைச் சேர்ந்த எட்டியப்பன் மகன் வடிவேல் (59). இவருக்கு விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள பட்டானூரில் 1.67 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை புதுச்சேரி, முதலியார் சாவடியைச் சேர்ந்த பூங்காவனம் மகன் வெள்ளையனுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு அனுபவித்துக் கொள்வதற்கு வடிவேல் பவர் கொடுத்துள்ளார். இதனை கடந்த 2009-ஆம் ஆண்டு ரத்து செய்துள்ளார்.
     இந்நிலையில் வெள்ளையன், புதுச்சேரி முதலியார்சாவடியைச் சேர்ந்த ஜெயபாலுக்கு முறைகேடாக 33 சென்ட் நிலத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும்.
     இது குறித்து விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் வடிவேல் புகார் செய்தார்.
     இது தொடர்பாக வெள்ளையன், ஜெயபால் மற்றும் இதற்கு உதவிய புதுச்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம், காளியப்பன், வானூர்-விநாயகபுரத்தைச் சேர்ந்த மணி, வானூர் சார்பதிவாளர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் மீது நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai