Enable Javscript for better performance
மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 24 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 24 லட்சம்

    By செஞ்சி,  |   Published on : 15th October 2016 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 24 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
     மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
     மேலும், கோயில் சுற்றுலாத்தலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
     அவ்வாறு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்தக் கணிக்கை மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் முடிந்த பிறகு எண்ணப்படும்.
     இந்நிலையில், புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
     உண்டியல் காணிக்கையாக ரூ. 24,42,255 பணம் மற்றும் 124 கிராம் தங்கம், 355 கிராம் வெள்ளி
     ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். வளத்தி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai