Enable Javscript for better performance
லாரி மோதி கிளீனர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாலையோரம் நின்றிருந்தவர் மீது லாரி மோதியதில், கிளீனர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     விழுப்புரம் அருகேயுள்ள சாலமேட்டைச் சேர்ந்த முருகன் மகன் சதிஷ்குமார் (25). லாரி கிளீனரான இவர், விழுப்புரம் புறவழிச் சாலையில் எல்லீஸ் சத்திரம் சந்திப்பு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் லாரியில் ஏற்றி வந்த மண்ணைக் கொட்டிவிட்டு, உணவகம் எதிரே சாலையோரம் நின்றிருந்தார்.
     அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற டேங்கர் லாரி, சதிஷ்குமார் மீது மோதியது. இதில், காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
     தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், சதிஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai