Enable Javscript for better performance
விவசாயி வீட்டில் ரூ. 3 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     வேட்டைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கோவிந்தசாமி (35). விவசாயியான இவர், கடந்த 12-ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியே வராண்டாவில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
     அப்போது வீட்டுக்குள் இருந்து சப்தம் கேட்க, உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் வீட்டில் இருந்து பின்பக்க வாசல் வழியாக தப்பியோடியுள்ளனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கோவிந்தசாமி வளத்தி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai