சுடச்சுட

    

    செஞ்சி அருகே பைக் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களது மகள் காயமடைந்தார்.
     நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த ராஜமுத்து மகன் பெருமாள் (49). இவர், தனது பைக்கில் மனைவி ஆனந்தி (45) உடனும், மற்றொரு பைக்கில் மகள் ஹரிஸ்ரீயும் (19) அமாவாசையையொட்டி, மேல்மலையனூருக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றனர். அங்கு வழிபாடு முடிந்து பைக்கில் ஊருக்குத் திரும்பினர். கடலாடிக்குளம் கூட்டுச் சாலை அருகே வந்தபோது, செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி, தம்பதி சென்ற பைக் மீது மோதியது.
     இதில் காயமடைந்த தம்பதி இருவரும் நிதழ்விடத்திலேயே இறந்தனர். அவர்களுடன் தனியாக பைக்கில் வந்த மகள் ஹரிஸ்ரீ காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     விபத்து குறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai