Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     முட்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் முருகன் (35). விவசாயியான இவர், அருகேயுள்ள எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த உலகநாதனின் நிலத்தை குத்தகைக்கு வாங்கி பயிர் செய்து வருகிறார். இந்நிலையில், பயிர் செய்யப்பட்ட அந்த நிலத்தில் முருகனின் தாயார் குப்பம்மாள் (50), வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, நிலத்திலிருந்த மின்கம்பத்திலிருந்து வந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
     இது குறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai