சுடச்சுட

    

    செஞ்சியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் பல்நோக்கு மருத்துவச் சிறப்பு முகாம் சனிக்கிழமை அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
     வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றார். செஞ்சி நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ரங்கநாதன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி, மருத்துவ முகாமின் சிறப்புகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
     இதில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏழுமலை கலந்துகொண்டு, மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
     செஞ்சி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவர்கள் மின்னொளி, இளங்கோ, ஷீலா, சத்யா, சுரேஷ் ஆகியோர் ரத்த அழுத்தம், பல், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர். சுகாதார ஆய்வாளர் ஏழுமலை நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai