சுடச்சுட

    

    தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் கம்பன் விழா மற்றும் ஜீவானந்தம், அன்னை தெரசா பிறந்த நாள் ஆகியவை முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
     தமிழ்ச் சங்கத் துணைச் செயலர் கோ.ஞானபுத்தன் தலைமை வகித்தார். பொருளர் தி.கி.சண்முகம், சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அ.செம்பியன், திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் த.வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார். "கம்பன் வரைந்த தாரை' என்ற தலைப்பில் சங்கராபுரம் முத்தமிழ் கலை இலக்கியப் பேரவை நிறுவனச் செயலர் பாரதிகிருஷ்ணன் உரையாற்றினார்.
     "விடுதலை வேள்வியில் பங்குபெற்ற தேசத் தலைவர்கள்' என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் மோகன், "ஜீவானந்தத்தின் சமுதாயத் தொண்டு' என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் தெ.சாந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
     தொடர்ந்து பூட்டை பாண்டியன், கணேசனார் ஆகியோரின் இசைப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
     "இராமகாதையில் உயர்வு: கதை அமைப்பிலா? கவிதைச் சிறப்பிலா? என்ற தலைப்பில் நடுவர் ச.தமிழரசு தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் புரவலர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai